Latestமலேசியா

பத்து தொகுதி: தியான் சுவா வேட்புமனு தள்ளுபடி! யாருக்கு ஓட்டு போடுவது?

கோலாலம்பூர், மே.1- பத்து நாடாளுமன்றத் தொகுதியில் தம்முடைய வேட்பு மனு ஏற்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட நிலையில், தாம் தொடுத்திருக்கும் வழக்கின் முடிவு வரும் வரையில் தம்முடைய சமிக்ஞைக்காக காத்திருக்கும் படி பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா தனது ஆதரவாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தம்முடைய வேட்புமனுவை நிராகரிக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக தாம் வழக்குத் தொடுத்திருப்பதாக அவர் கூறினார்.

வழக்கு முடிவு எப்படி வேண்டுமானாலும் வரலாம். ஒருவேளை தாம் போட்டியிடுவது நிராகரிக்கப் படுமேயானால், பத்துத் தொகுதியை எதிர்க்கட்சிகளின் போட்டியின்றி அப்படியே விட்டு விடக்கூடாது. அடுத்து என்ன செய்யலாம் என்பதற்கான சமிக்ஞையை என்னிடமிருந்து எதிர்பார்த்து இருங்கள் என்று இங்கு நடந்த மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் தியான் சுவா சொன்னார்.

அப்படியொரு சூழ்நிலையில் பக்காத்தானுக்கும் சீர்திருத்த இயக்கத்திற்கும் ஆதரவான தரப்பை அடையாளம் கண்டு அவர்களை நமது வேட்பாளராக அங்கீகரிப்போம் என்று தியான் சுவா கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker