Latestமலேசியா

மகாதீரின் வார்த்தை தடுமாற்றமா? இதெல்லாம் அரசியல்லே சகஜமப்பா..!

டுங்கூன், மே.1- தொடர்ச்சியான பிரச்சாரம், வெளியூர் பிரயாணம் ஒருவரை மிகவும் சோர்வாக்கி விடும். களைப்பினால் உளறல் ஏற்படுவது புதிதல்ல. துன் மகாதீர் முகமட்டிற்கும் அதேப் போன்று களைப்பு ஏற்பட்டுள்ளது.

அதிக களைப்பின் போது உரையாற்றிக் கொண்டிருந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவரான துன் மகாதீர் முகமட், அங்கு கூடியிருந்த மக்களிடம் எதிர்வரும் 9-ஆம் தேதியன்று ‘தனது தலைமையிலான எதிர்க்கட்சிக்கு வாக்களிக்காதீர்’ என்று கூறி விட்டார்.

அவர் அவ்வாறு கூறியதைக் கேட்டதும், கூடியிருந்த மக்கள் சிரித்து விட்டனர். அவர்கள் சிரித்ததைக் கேட்டு, தான் உளறியதை உணர்ந்த மகாதீர் உடனே தான் கூறியதை சரி செய்துக் கொண்டார்.

அந்தக் கூட்டத்தில் துன் மகாதீருடன் அவரின் துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவுன் கலந்து கொண்டார். அவரும் அந்நிகழ்வின் போது தூக்கக் கலக்கத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பை போன்றில்லாமல், மகாதீர் சற்று சோர்வடைந்து விட்டார் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker