Latestமலேசியா

விமானத்தில் சதியா? மகாதீர் பொய்! வழக்கு தொடுக்க நஸ்ரி கோரிக்கை!

கோலக் கங்சார், மே.1- தன்னுடைய ஜெட் விமானத்தில் சதிநாச வேலை செய்யப் பட்டிருப்பதாக பொய்க் குற்றச்சாட்டை கூறிய துன் மகாதீருக்கு எதிராக விமானப் போக்குவரத்து ஆணையம் வழக்குத் தொடுக்கவேண்டும் என்று சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஸீஸ் வலியுறுத்தினார்.

இந்தக் குற்றச்சாட்டு கமையானது. அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையின் தோற்றத்தைப் பாதிக்கக்கூடியது. விமானப் போக்குவரத்துத் துறை மீது உலகம் வைத்திருக்கும் நம்பிக்கையை பாதிக்கக்கூடியது என்று அவர் சொன்னார்.

எந்தவொரு ஆதாரமும் இன்றி துன் மாகாதீர் குற்றஞ்சாட்டி இருக்கிறார். இது பொறுப்பற்ற செயல் என்பதால் விமானப் போக்குவரத்து ஆணையம் சட்ட ரீதியில் இதனை அணுகவேண்டும் என்றார் அவர்.

அண்மைய சில தினங்களுக்கு முன்பு லங்காவிக்கு பயணம் செய்யவிருந்த தம்முடைய வினானத்தில் சில தரப்புகள் சதி வேலை செய்திருந்ததற்கான சாத்தியங்கள் இருந்ததாக துன் மகாதீர் கூறியிருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker