Latestமலேசியா

2018 -தேர்தல்: இதுவே எங்களுக்கு இறுதிப் ‘போர்’ –கிட் சியாங் பேச்சு

கோலாலம்பூர், மே.1- பல ஆண்டுகளாக துன் மகாதீர் முகமட் மற்றும் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமை எதிர்த்து போட்டியிட்ட லிம் கிட் சியாங், இம்முறை, அவ்விருவருடன் கூட்டணி அமைத்து தேர்தல் முன்னணியை எதிர்த்து போட்டியிடவிருக்கிறார்.

இந்த 14-ஆவது பொதுத் தேர்தல் தமக்கும், தனது இரு ‘கூட்டாளிகளுக்கும்’ இது இறுதி ‘போராக’ அமையக் கூடும் என்று ஜசெக கட்சியின் மூத்தத் தலைவரான கிட் சியாங் சொன்னார்.

“எனக்கு 77 வயதாகிறது. நான் கடந்த 12 பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறேன். இதுவே நான் போட்டியிடும் கடைசி பொதுத் தேர்தலாகும். மகாதீருக்கும் 93 வயதாகிறது. 2023-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அவர் ஒரு கூட்டணியை வழி நடத்துவார் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது” என்று கிட் சியாங் கூறினார்.

ஜூன் மாதம் 8-ஆம் தேதியன்று சிறையிலிருந்து விடுதலையாகும் அன்வாருக்கு இன்னும் 4 மாதங்களில் 71 வயதாகிறது.

“மே மாதம் 9-ஆம் தேதியன்று நடைபெறும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணி ஆட்சி அமைக்காவிடில், நாட்டின் 8-ஆவது பிரதமராக அன்வார் இப்ராஹிம் பொறுப்பேற்க முடியாது. அதனைத் தொடர்ந்து அடுத்த பொதுத் தேர்தலில் அவர் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை வழி நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்” என்று கிட் சியாங் கருத்துரைத்தார்.

நாட்டில் மாற்றத்தை கொண்டு வர இப்போது இந்தத் தேர்தலை மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். பக்காத்தானுக்கு மக்கள் வாக்களித்தால் மட்டுமே, நாட்டில் மாற்றம் நிகழும். மலாய்க்காரர்களின் ஆதரவு பக்காத்தானுக்கு இருந்தாலும், புத்ராஜெயாவை கைப்பற்றும் அளவில் அந்த ஆதரவு இல்லை என்று கிட் சியாங் சொன்னார்.

இருப்பினும், எதிர்பார்க்காத சில நிகழ்வுகள் பொதுத் தேர்தலின் போது நடைபெறும். அவ்வகையில் இம்முறை பக்காத்தானுக்கு வாக்குகள் அதிகம் பெறப்பட்டு, அவர்கள் வெற்றி பெறலாம் என்று அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker