Latestமலேசியா

28 லட்சம் இல்லத் தரசிகளுக்கு ஓய்வுகால நிதியா? -பாக்காத்தான்

புக்கிட் மெர்தாஜாம், மே1- மே 9ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியைக் கைப்பற்றுமானால், இல்லத் தரசிகளுக்கென ஓய்வுகால நிதி ஒன்று தொடங்கப்படும் என்ற கடந்த கால வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என்று புக்கிட் மெர்தாஜாமின் நடப்பு எம்.பி.யாக இருந்தவரான ஸ்டீபன் சிம் ஷீ தெரிவித்தார்.

‘நாங்கள் ஆட்சியைக் கைப்பற்றினால், ஒவ்வொரு இல்லத் தரசிக்கும் ஓய்வுகால நிதியாக 600 ரிங்கிட் வழங்குவோம். அதேவேளையில், அவர்களின் கணவன்மார்கள் தங்களின் மாத வருமானத்தில் இருந்து இல்லத் தரசிகளுக்கான நிதிக்காக 2 விழுக்காட்டினை வழங்குவார்கள் என்று அவர் சொன்னார்.

இல்லத் தரசிகளுக்கு சமூகப் பாதுகாப்பு என்று எதுவுமில்லை. மேலும் காப்புறுதி போன்ற பாதுகாப்புக் கூட பலருக்கு இருப்பதில்லை. ஆனால், அவர்கள் எல்லா நாள்களிலும் இரவு பகல் பாராமல் குடும்பத்திற்காக உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். கடந்த ஆண்டில் நாடாளுமன்றத்தில் தமக்குத் தரப்பட்ட புள்ளி விபரங்களின் படி நாட்டில் இல்லத் தரசிகளாக 28 லட்சம் பெண்கள் இருக்கிறார்கள் என்றார் அவர்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker