Latestஉலகம்

அதிபர் மெக்ரனுக்கு எதிராக அதிருப்தி: கலவர பூமியாக மாறிய பாரிஸ் நகர்!

பாரிஸ், மே.2- பிரான்சில் போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கியதால் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பிரான்ஸ் அதிபர் மெக்ரான் அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள வேளையில் கலவரம் மூண்டது.

இந்நிலையில் மெக்ரான் மீதான அதிருப்தியை வெளிகாட்ட “பார் லெப்ட் அனார்ஜிட்” எனப்படும் தீவிரவாத இடதுசாரி குழுவினைச் சேர்ந்த 1,200க்கும் மேற்பட்டோர் முகமூடியுடன் பாரிசில் போராட்டம் நடத்தினர்.

மெக்ரான் வேலை வாய்ப்பை அதிகரிக்க தொழிலாளர் ஒழுங்கு முறைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்தப் போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் அங்கிருந்த கடைகளின் சன்னல்களை உடைத்தனர். அதுமட்டமின்றி மெக்டோனால்ஸ் உணவகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதால் அந்தக் கடை முற்றிலும் சாம்பலாகியது.

அருகிலிருந்த கடைகளிலும் தீப் பரவியது. இதைத் தொடர்ந்து சாலையில் இருந்த கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு, தீப் பரவியதால் போலீசார் போராட்டக்காரர்களைக் கலைப்பதற்குக் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசியுள்ளனர்.

அப்போது இரு தரப்புக்கும் கைகலப்பு மூண்டது. இதன் காரணமாக 200 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறியதாகவும் கூறப்படுகிறது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker