Latestமலேசியா

உணவகம் – மளிகைக் கடையில்  கொள்ளை;  6  போலீஸ்காரர்கள் பிடிபட்டனர்!

சுங்கை பூலோ, மே.2-  இங்கு குவாங், ஜாலான் எம்.பி.1 மாத்தாங் பாகாரில் அமைந்துள்ள ஓர் உணவகத்திலும் ஒரு மளிகைக் கடையிலும் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் போலீஸ்காரர்கள் அறுவர் கைதாகினர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, சம்பந்தப்பட்ட உணவகத்துக்கும் மளிகைக் கடைக்கும் சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளத்தான் அந்த அறுவரும் பணிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், அவர்கள் அதனையே வாய்ப்பாகப் பயன்படுத்தி, அங்குக் கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர்

உணவகத்தில், ரிம.4 ஆயிரம் ரொக்கப் பணத்தையும், மளிகைக் கடையில்ரிம.3,500 ரொக்கம், ஐந்து சிகரெட் பெட்டிக் கட்டுகள், ஒரு கடிகாரம், கைப்பேசி முன்கட்டண அட்டைகள் ஆகியவற்றையும் அவர்கள் களவாடியது, சோதனையில் தெரிய வந்தது என சிலாங்கூர் போலீஸ் படைத்தலைவர் டத்தோ மஸ்லான் மன்சோர் தெரிவித்தார்.

அறுவரும் குற்றத்தை ஒப்புக்கொண்ட வேளையில், மே ஆறாம் தேதி வரையில், அவர்கள் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker