Latestஉலகம்

“நான் சாகவே விரும்புகிறேன்..!” 104 வயது விஞ்ஞானி அறிவிப்பு

கான்பெர்ரா,மே.2- ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற மூத்த விஞ்ஞானி டேவுட் குடால் (104 வயது) தான் இந்த வயது வரை உயிருடன் இருப்பதற்காக வருந்திவதாகவும் அதனால், இறப்பதற்கு உதவும் நிறுவனம் ஒன்றின் உதவியால் மரணத்தை மனமுவந்து ஏற்றுக் கொள்ள சுவிட்சர்லாந்துக்கு செல்லவிருப்பதாகவும் கூறியுள்ளார்.

டேவிட் குடால் தனது வாழ்க்கை தரம் குறைந்துக் கொண்டே வருவதால் பேசெல் நகரிலுள்ள இறப்பதற்கு உதவும் நிறுவனம் ஒன்றிடம் நேர்காணலுக்கு தேதி பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.

“நான் மகிழ்ச்சியாக இல்லை. நான் இறக்க விரும்புகிறேன் . நான் இறப்பது குறித்து எனக்குக் கவலை இல்லை. ஆனால் இறப்பைத் தடுப்பது எனக்குக் கவலையளிக்கிறது” என்று கூறியுள்ளார் .

“என்னை போன்ற வயதான ஒருவருக்கு இறப்பை முடிவு செய்வதற்கான உரிமை உட்பட முமு உரிமையும் வழங்கப் பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார் .
2016 ஆம் ஆண்டு அவரது பல்கலைக்கழகம் கட்டாயப்படுத்தி அவரை அவர் பதவியிலிருந்து நீக்க முற்பட்டதையடுத்து அவர் பத்திரிகைகளில் தலைப்பு செய்தியானார்.

102 வயதான அவர் பணி புரிவதற்குத் தகுதியற்றவர் எனக்கூறி பெர்த்திலுள்ள எடித் கோவன் பல்கலைக்கழகம் அவரை வேலையிலிருந்து நீக்க முயன்றது.
இதற்கு உலகளாவிய விஞ்ஞானிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அந்த முடிவில் இருந்து பின் வாங்கியது .

ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை டேவிட் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
ஆஸ்திரேலியாவில் இறப்புக்கு உதவுதல் சட்ட விரோதம் என்பதால் டேவிட் சுவிட்சர்லாந்துக்கு. செல்லவிருக்கிறார்.

அவர் சுவிட்சர்லாந்து செல்வதற்கான செலவுகளுக்காக ‘எக்சிட் இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு நிதி திரட்டி வருகிறது. இது வரை 17,000 ஆஸ்திரேலியா டாலர்கள் சேர்ந்துள்ளது. ஆனால் டேவிட் க்கு எந்த உடல்நலக்குறை எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker