Latestவிளையாட்டு

பூப்பந்து: சூன் சியாங்கிற்கு 15 ஆண்டு; ஜூல்ஃபாட்லிக்கு  20 ஆண்டு தடை!

கோலாலம்பூர், மே.2- பந்தயம், சூதாட்டம், முறைகேடு என பல அம்சங்களைல் அனைத்துலகல பூப்பந்து சம்மேளனத்தின் நன்னடத்தை விதிகளை மீறியதற்காக மலேசிய  பூப்பந்து வீரர்களான ஜூல்ஃபாட்லி ஜூல்கிப்ளிக்கு 20 ஆண்டுத் தடையும் டான் சூன் சியாங்கிற்கு 15 ஆண்டுத் தடையையும்  உலக பூப்பந்து சம்மேளம் விதித்தது.

ஜூல்கிப்ளி 2038-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ஆம் தேதி வரை, பூப்பந்து போட்டிகளில் கலந்துக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் பூப்பந்து பயிற்சி, அலுவல் மற்றும் மேம்பாட்டு பயிற்சிகளிலும் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது

டானுக்கும் அதே போன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கும் ரிம.59,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஜூல்கிப்ளிக்கு அமெரிக்க டாலர் 25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

பூபந்து சம்மேளனத்தின் 26 விதிமுறைகளை டானும், 27 விதிமுறைகளை ஜூல்கிப்ளியும் மீறியுள்ளனர் என்று விசாரணைக் குழு தெரிவித்தது.

அவ்விருவரும் கடந்த 2013-ஆம் ஆண்டு முதற்கொண்டு பல்வேறான ஊழல்களில் (பூப்பந்து சம்பந்தப்பட்ட) ஈடுபட்டுள்ளனர் என்றும், டானை விட ஜூல்கிப்ளி அதிகமான ஊழல் புரிந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அந்தக் காலக் கட்டத்தில் குறைந்தது 4 பூப்பந்து ஆட்டங்களின் போது, ஜூல்கிப்ளி அந்த ஊழல்களை புரிந்துள்ளார் என்று சம்மேளனம் கூறியது. இத்தண்டனையை எதிர்த்து டான் மற்றும் சூன் சியாங் ஆகிய இருவரும் மேல் விசாரணை கோரலாம்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker