Latestமலேசியா

வாக்களிப்பு நாளன்று  தேசியப் பதிவு இலாகா முகப்பிடங்கள் திறந்திருக்கும்!

பெட்டாலிங் ஜெயா,மே.2- வரும் மே 9-ஆம் நாள், பொதுத் தேர்தலன்று புத்ராஜெயாவிலும், இதர மாநிலங்களிலும் அடையாள அட்டைக்கான முகப்பிடங்களை தேசியப் பதிவுத் துறை திறக்கும்.

அடையாள அட்டைப் பிரச்சனையினால், வாக்காளர்கள் வாக்களிக்காமல் இருப்பதைத் தவிர்க்க, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, தேசியப் பதிவுத் துறைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை, வாக்காளர்கள் தங்களின் அடையாள அட்டையைத் தொலைத்துவிட்டால்அவர்களுக்கு 45 நிமிடங்களில் புது அடையாள அட்டை செய்து தரப்படும்.

மேல் விவரங்களுக்கு, மக்கள், புத்ராஜெயாவிலுள்ள தகவல் தொடர்புத் துறையை03-8880 7077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது  pro@jpn.gov.my என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker