Latestமலேசியா

தியான் சுவா போட்டியிட முடியுமா?  நாளை மே 4-ஆம் தேதி வருது தீர்ப்பு

கோலாலம்பூர், மே 3: பத்து நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர்  கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா களமிறங்க வாய்ப்புள்ளதா இல்லையா என்ற கேள்விக்கான  பதில், நாளைய கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரியவரும்.

கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி நடைபெற்ற வேட்புமனுத்தாக்கலின்போது, தியான் சுவாவின் மனு நிராகரிக்கப்பட்டது. கடந்த மாதம் நீதிமன்றம் அவருக்கு ரிம.2 ஆயிரம் அபராதம் விதித்திருப்பதால், அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று தேர்தல் அதிகாரி அன்வார் முகமட்  சாயின்  கூறியிருந்தார்.

அதையடுத்து,  தேர்தலில் தாம்  போட்டியிட முடியுமா என்பது குறித்து விசாரிக்க,  அவர் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி   கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இன்று, அந்த தம் முன்னிலையில் விசாரிக்கப்பட்ட நிலையில், நீதிபதி  நோர்டின் ஹசான், இந்த வழக்கின் தீர்ப்பு நாளை அளிக்கப்படுமென அறிவித்தார்

கடந்த மாதம்,  ஷா ஆலாம் நீதிமன்றம் ரிம.2 ஆயிரம் அபராதம் விதித்ததால் தியான் சுவாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

கடந்த 2014-ஆம் ஆண்டு,  ஒரு போலீஸ் அதிகாரியைப் பார்த்து முட்டாள் என  இழிவுபடுத்தியதால்  அவருக்கு அந்த அபராதம் விதிக்கப்பட்டது.

தொடக்கத்தில் சேஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு ரிம.3 ஆயிரம்  அபராதத்தை விதித்தது. தியான் சுவா மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து,  அபராதத் தொகை ரிம. 2 ஆயிரமாகக் குறைக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker