Latestமலேசியா

டிரம்பின் நிர்வாண நிலை 28 ஆயிரம் டாலருக்கு ஏலம்

வாஷிங்டன், மே.4- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாணச் சிலை ஒன்று, 28 ஆயிரம் டாலருக்கு ஏலத்தில் எடுக்கப் பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அமெரிக்கா அதிபர் தேர்தலின் போது உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக ‘வெஸ்ட் கோஸ்ட் அனார்சிஸ்ட்’ என்ற இயக்கம் டிரம்பின் ஐந்து நிர்வாணச் சிலைகளைத் தயாரித்து காட்சிக்கு வைத்தது.

இதில் நான்கு சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரேயொரு சிலை மட்டும்  அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்தச் சிலை ஏலத்தில் விடப்பட்டது. இதனை ஆராய்ச்சியாளர் ஒருவர் 28 ஆயிரம் டாலருக்கு ஏலத்தில் எடுத்துள்ளார்.

இந்தச் சிலை லாஸ் வேகாஸ் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப் போவதாக அந்த ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker