Latestஇந்தியா

‘தமிழகத்துக்கு தண்ணீரா? எங்களுக்கே தண்ணீர் இல்லை’- கர்நாடகா முதல்வர்

பெங்களூர். மே.4- “எங்களுக்கே தண்ணீர் இல்லாத போது தமிழகத்துக்கு எப்படி திறந்து விட முடியும்?’ எனக் கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக நேற்று மே 3 ஆம் தேதிக்குள் வரவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் வரவுத் திட்ட அறிக்கை தயாராக உள்ளது. கர்நாடகத் தேர்தலில் காரணமாக அமைச்சரவையில் ஒப்புதல் பெற முடியவில்லை அதனால் 10 நாள்கள் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் கூறினார்.

இதற்குக் கண்டனங்கள் தெரிவித்த நீதிபதிகள் காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க முடியாது. தமிழகத்துக்கு இந்த மாதம் 4 டிஎம்சி நீர் கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும் . இந்த உத்தரவை மீறினால் கர்நாடக கடும் விளைவைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து காவிரி விவகாரத்தில் இது வரை எடுத்த நடவடிக்கை பற்றிய அறிக்கையைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா கர்நாடக அணைகளில் போதுமான அளவு நீர் இல்லாத நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker