Latestமலேசியாவிளையாட்டு

பளு தூக்கும் வீரர் ஃபஸ்ரூலின்   வெண்கலப் பதக்கம் பறிப்பு!

கோலாலம்பூர், மே.4- தேசிய பளு தூக்கும் வீரர் முகமட் ஃபஸ்ரூல் அஸ்ரி மொடாட், தடை விதிக்கப்பட்ட ஊக்கமருந்தை உட்கொண்டது சோதனையில் உறுதி செய்யப்பட்டது.

சென்ற மாதம், கோல்ட் கோஸ்ட்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் 85 கிலோகிராம் எடைக்கு  கீழான ஆண்கள் பிரிவில் பங்கேற்ற ஃபஸ்ரூல், வெண்கலப்
பதக்கத்தை வென்றிருந்தார்.

இந்நிலையில்,  அந்தப் போட்டியின்போது தனது திறனைக் காண்பிக்க அவர் ‘அனபோலிக்’ என்ற ஊக்கமருந்தை உட்கொண்டது, புதுடில்லியில் மேற்கொண்ட சோதனையில் நிரூபிக்கப்பட்டது.

பகாங், ரொம்பினைச் சேர்ந்த ஃபஸ்ரூல் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் நாட்டுக்குப் பெற்றுத்  தந்த வெண்கலப் பதக்கமும்  பறிக்கப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker