Latestமலேசியா

கட்சி பற்றிக் கருதாமல் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் – மோகனா முனியாண்டி

காப்பார், மே.5- காப்பார் தொகுதியிலுள்ள  வாக்காளர்கள் மனதில், தே.மு.வும்        ம.இ.காவும் வேறுன்றத் தவறிவிட்டது உண்மைதான்.

அதிலும் குறிப்பாக, 45 வயதுக்கும் குறைவான இளைஞர்களுக்கு, தே.மு. மீது அதன் உறுப்புக் கட்சியான ம.இ.கா மீதும் அவ்வளவாக ஈடுபாடில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால், கட்சியைப் பார்த்து வாக்களிக்காதீர்கள், ஒரு தனி ஆளாகப் பார்த்து எனக்கு வாய்ப்பளியுங்கள் என மோகனா காப்பார் மக்களைக்  கேட்டுக்கொண்டார்.

காப்பார் நாடாளுமன்றத்தில் போட்டியிடவிருக்கும் மஇகாவின் மகளிர் பிரிவின் தலைவருமான  மோகனா முடியாண்டியை எதிர்த்து மூவர் போட்டியிடுகின்றனர்.

பிகேஆர் கட்சியின் சார்பில் அப்துல்லா சானி பின் அப்துல் சாமிட், பிஆர்எம் கட்சி சார்பில் மாணிக்கவாசகம் த/பெ சுந்தரம், பாஸ் கட்சியின் சார்பில் அப்துல் ரணி பின் ஒஸ்மான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker