Latestமலேசியா

மே.18-19இல் கம்போடியாவில் உலகத் தமிழர் மாநாடு!

கோலாலம்பூர், மே 5- எதிர்வரும் மே மாதம் 18-19 ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் கம்போடியாவில், உலகிலேயே மிகப் பெரிய வழிப்பாட்டுத் தலம் என்ற பெருமைக்குரிய அங்கோர்வாட் கோவிலுக்கு அருகில், “உலகத் தமிழர் ஒன்றுகூடல்” நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் உலகெங்கிலும் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் ஒன்றுகூடுகிறார்கள். முதனமையாக, தென்கிழக்காசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பர்மா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், லாவோஸ், புருணை மற்றும் பப்புவா நியூகினி ஆகிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ஒன்று கூடி, மற்ற அனைத்து உலக நாடுகளிலிருந்து வருகை தரும் தமிழர்க லை வரவேற்பர்.

தென்கிழக்காசியாவின் பெருமை, பழமை வாய்ந்த கோவில்கள், இன்றைய தென்கிழக்காசிய மக்கள் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து கிடக்கும் பண்டைத் தமிழர்களின் கலை, கலாச்சாரம், இசை , நடனம், உணவு, உடை, விளையாட்டு, விவசாயம், கட்டடக் கலை, மற்றும் தமிழ்மொழியின் பரவல் போன்ற தமிழரின் பெருமைகளை பறைசாற்றும் மாநாடாக இது அமையும்.

பிற ஆசிய நாடுகளான, சீனா, ஜப்பான், கொரியா, தைவான், இலங்கை மற்றும் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், டென்மார்க், ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், சவுதி போன்ற ஆகியநாடுகளில் இருந்தும் தமிழர்கள் ஒன்று கூடுகிறார்கள்.

தென்புலத்தார் பன்னாட்டுத் தமிழர் கூட்டமைப்பின் நிறுவனர் திரு ஒரிசா பாலுவின் தொடக்க முயற்சியாலும், மற்ற தமிழ் அமைப்புகளான கம்போடியா தமிழர் பேரவை, தென்கிழக்காசியத் தமிழ்ச் சங்கம் ‘கோட்டோ’ எனப்படும் தமிழ் வம்சாவளியினரின் உலக அமைப்பு, மற்றும் உலகத் தமிழ் இளைஞர் அமைப்பு போன்ற அமைப்புகளின் கூட்டு முயற்சியாலும் இந்த மாநாடு மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டிலே கம்போடியாவின் ‘சியாம் ரீப்’  தென்கிழக்காசியப் பல்கலைக் கழகத்தில், தமிழ் நாட்டிலுள்ள ஒரு பல்கலைக் கழகத்தோடு இணைந்து, தமிழுக்கான இருக்கை அமைப்பதற்கென ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்ட விழா மலர் வெளியிடப்படும். மேலும், உலகத் தமிழர் ஒன்றிணைந்த பன்னாட்டு வணிக மையம் தொடங்கப்பட உள்ளது.

தென்கிழக்கு மற்றும் கம்போடிய நாட்டின் பல அரசு தலைவர்களும் மற்றும் தமிழ் நாட்டிலிருந்து அமைச்சர்கள், துணைவேந்தர்கள், தொழிலதிபர்கள், தமிழ் ஆர்வலர்கள், திரைத்துறை பிரமுகர்கள், பேராசிரியர்கள் அனைவரும் கலந்துகொள்கிறார்கள்.

ஒருங்கிணைப்பாளர்கள்: 1) ஒரிசா பாலு +919940240847 2) சீனிவாச ராவ் +855969296456 3) ஜானசேகரன் +918870806789 4) திருத்தணிகாசலம் +919884612351

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker