Latestமலேசியா

சுங்கை சிப்புட்: தே.மு. கோட்டையாக மாற வேண்டும்” -நஜிப்

சுங்கை சிப்புட், மே.6- வரும் பொதுத் தேர்தலில், சுங்கை சிப்புட்டின் மூன்று தொகுதிகளும், தே.மு வசமாக வேண்டும். தற்போது, சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியும், ஜாலோங் தொகுதியும் எதிர்க்கட்சியின் பிடியில் உள்ளன. லிந்தாங் தொகுதியை மட்டுமே தே.மு. கொண்டுள்ளது. இந்நிலை மாற வேண்டுமென டத்தோ ஶ்ரீ நஜீப் கேட்டுகொண்டுள்ளார்.

நேற்று, சுங்கை சிப்புட் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற “ஹேபாட்கான் நெகராக்கூ” நிகழ்ச்சியில் கூடிய மக்களிடத்தில் நஜீப் இந்த கோரிக்கையை முன் வைத்தார்.

கடந்த இரு தவணைகளாக, சுங்கை சிப்புட் நாடாளுமன்றத்தை, பி.எஸ்.எம்.மின் டாக்டர் ஜெயகுமாரும், ஜாலோங் சட்டமன்றத் தொகுதியை ஜ.செ.க.வின் லோ ஸீ யீவும் வெற்றிக் கொண்டனர்.

இந்தப் பத்தாண்டுகளில், சுங்கை சிப்புட்டில் எதிர்க்கட்சி எதுவும் செய்யவில்லை. இம்முறை அதிகாரத்தை தே.மு.விடம் ஒப்படையுங்கள். சுங்கை சிப்புட்டில் மறுமலர்ச்சியை கொண்டு வருகிறோம் என நஜீப் மக்களிடத்தில் குறிப்பிட்டார்.

மே 9-ஆம் தேதி, சுங்கை சிப்புட் தே.மு.வுக்குச் சொந்தமானால், அங்கு மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களைக் கொண்டு வருவோம்.
“சுங்கை சிப்புட்டிலுள்ள பூர்வக்குடியினர் உட்பட அனைத்து இனத்தவரும் பயன்பெறும் வகையிலான மாற்றங்களை தே.மு. ஏற்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“பூர்வக்குடி பள்ளியான பாவோங் இடைநிலைப்பள்ளி முழு சீர்த்திருத்தப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும். அப்படி தரம் உயர்த்தப்பட்டால், நாட்டின் முதல் பூர்வக்குடி சீர்த்திருந்த இடைநிலைப் பள்ளியாக இது விளங்கும். மேலும், 500 வீடுகள் அடங்கிய மக்கள் வீடமைப்புத் திட்டத்தையும் நிறுவுவோம்.”

“இவையெல்லாம் கிடைக்க, அதிகாரம் தே.முவின் கைக்கு மாற வேண்டும்” என நஜீப் அறிவுறுத்தினார். வரும் மே 9-ஆம் தேதி, சுங்கை சிப்புட்டில், தே.மு.வின் கொடி பெருமையோடு பறக்க வேண்டும் என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker