Latestமலேசியா

‘என்னிடம் சொத்துக் கணக்கு கேட்பதா?’ ரபிடா ஆவேசம்

கோலாலம்பூர்,மே,7- “என்னுடைய சொத்து கணக்கை என்னால் காட்ட முடியும். நான் நேர்மையான வழியாலே சம்பாதித்துள்ளேன்,” என்று முன்னாள் அமைச்சர் ரபீடா அஸீஸ் கூறினார்.

ரபீடா அஸீஸ் தனது சொத்துக் கணக்கை காட்ட முடியுமா? என்று முன்னாள் பெர்சத்து கட்சியின் உறுப்பினரான அய்னா சாருடீன் என்பவர் சவால் விடுத்திருந்தார்.

அதற்குப் பதிலளித்த ரபீடா அஸீஸ், “நானும் என் கணவரும் நேர்மையான வழியில் சம்பாதித்து உள்ளோம். என் கணவர் செம்மாட் பாஷிற் 16 ஆண்டு காலம் மே வங்கியில் தலைவராக இருந்துள்ளார் என்று கூறினார்.

ஆனால், என் சொத்துக் கணக்குப் பற்றி கேள்வி எழுப்புகின்றவர், தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்களுடைய சொத்து கணக்கு பற்றி கேள்வி எழுப்புவதற்கு துணிச்சல் உண்டா? என்று ரபீடா அஸிஸ் சவால் விடுத்தார்.

குறிப்பாக, ஷரிஷாட் ஜாலிலுக்கு எதிராக சொத்துக் கணக்கு கேட்க முடியுமா? மக்களின் பணத்தை அந்த மாட்டுக்கார பெண்மணி திருப்பிக் கொடுப்பாரா? என்று மலேசிய அரசியலில் ‘இரும்புப் பெண்மணி’ என வர்ணிக்கப்படும் ரபீடா அஸிஸ் கேள்வி எழுப்பினார்.

மாடு வளர்ப்புப் பண்ணைத் திட்டம் தொடர்பில் பெறப்பட்ட 250 மில்லியன் ரிங்கிட் கடனை ஷரிஷாட் இன்னமும் திருப்பிக் கொடுக்கவில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker