Latestமலேசியா

சிகாமட்டில் பெல்டாவினருக்கு ரிம.4,000 உதவித் தொகை! -சுப்ரா அறிவிப்பு

சிகாமாட், மே.7- சிகாமட் தொகுதியிலுள்ள பாலோங் தீமோர் டூவா, பாலோங் தீமோர் தீகா ஆகிய பெல்டா குடியிருப்புகளிலுள்ள 265 குடியிருப்பாளர்களுக்கு மறுநடவுக்கான உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்தக் குடியிருப்பாளர்களுக்கு தலா ரிம.4 ஆயிரம் வழங்கப்படும் என  அத்தொகுதியில் போட்டியிடும் தே.மு. வேட்பாளர் டத்தோஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம் நேற்று அறிவித்தார்.

இந்த உதவித் தொகையை வழங்குவதற்கான அனுமதியை பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப்  வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த ஊக்குவிப்புத் தொகை இன்றிலிருந்து வழங்கப்படும். பொதுத் தேர்தலுக்குள் அனைத்து பெல்டா குடியிருப்பாளர்களுக்கும் அத்தொகை வழங்கப்பட்டுவிடும்.

சம்பந்தப்பட்ட பெல்டா குடியிருப்பாளர்களின் நிதிச் சுமையை இந்த உதவித்தொகை உதவும் என சுகாதார அமைச்சருமான சுப்ரமணியம் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker