Latestமலேசியா

ஜொகூர்-சிங்கை பாலத்தில் மே 5-13 வரை சாலை பணிகள் நிறுத்தம்!

ஜொகூர்பாரு,மே,7 – 14வது பொதுத்தேர்தலின் போது மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான நிலமார்க்கத்தில் சாலை சீரமைப்புப் பணிகள் எதுவும் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 5 ஆம் தேதியில் இருந்து மே மாதம் 13ஆம் தேதிவரையில், கடல் பாலம், மற்றும் 2 ஆவது பாலம் ஆகிய இடுப்பகுதிகளிலும் சாலை பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்று பிளஸ் நிறுவனம் தெரிவுத்துள்ளது.

பாலத்தின் மிகவிரிவான சாலை சீரமைப்புப் பணிகள் நடந்து வருவதாகவும் இதனால் மே 9 ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து வாக்களிப்புக்காக மலேசியாவுக்குத் திரும்பும் வாக்காளர்கள் சிரமத்தை எதிர்நோக்குவார்கள் என்றும் சமூக ஊடகங்களில் பரவிய செய்தி குறித்து கருத்துரைத்த பொது பிளஸ் நிறுவனம் மேற்கண்டவாறு தெரிவித்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker