Latestமலேசியா

பக்காத்தான் ஹராப்பானை ஆதரித்து கடிதமா? -ரேமன் நவரத்தினம் மறுப்பு!

பெட்டாலிங் ஜெயா, மே.7- “புத்திசாலித்தனமாக வாக்களியுங்கள் என்று மக்களை நான் கேட்டுக்கொண்டது உண்டு. ஆனால், பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களியுங்கள் என்று நான் எந்த கடிதமும் எழுதவில்லை,” என டான்ஶ்ரீ ரேமன் நவரத்தினம் கூறினார்.

அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதம், ஓர் இணையப் பதிவேட்டில் வெளியிடப்பட்டது.  “அந்த கடிதத்தை நான் எழுதவில்லை. ஆனால், கடிதம் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது,” என Asli எனப்படும் ஆசிய தலைமைத்துவ, வியூக கழகத்தின் தலைவருமான ரேமன் நவரத்தினம் சொன்னார்.

தான் எழுதிய கடிதமென தவறாக தகவல் வெளியிட்டதற்காக சம்பந்தப்பட்ட இணையப் பதிவேட்டுத் தரப்பு, தம்மிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

“நான் யார் பக்கமும் இல்லை. நான் நடுநிலையானவன். அதன் அடிப்படையில், நாட்டை சிறப்பாக வழிநடத்தக்கூடியவர்கள் யார் என ஆராய்ந்து சிந்தித்து வாக்களியுங்கள் என்று மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தேனே தவிர பக்காத்தானுக்கு வாக்களியுங்கள் என்று நான் எந்த அணியையும் சார்ந்து சொல்லவில்லை” என அவர் கூறினார்.

இவ்வேளையில்,மலேசியா பல்லின மக்கள் வாழும் நாடு. அதனால், இனத்துவேசம் பேசும் எந்த வேட்பாளருக்கும் தப்பித் தவறிக்கூட வாக்களித்து விடாதீர்கள் என ரேமன் நவரத்தினம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker