Latestமலேசியா

பத்து தொகுதியில் இடைத் தேர்தல் சதியா? வதந்தியை மறுத்தார் தியான் சுவா!

கோலாலம்பூர், மே.7- பத்து நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் பி.பிரபாகரனுக்கு தியான் சுவா ஆதரவளித்து வருகிறார் என்றாலும், பிரபாகரன் வென்ற பின்னர் அவரை பதவி விலகச் செய்து இடைத்தேர்தலில் தியான் சுவா போட்டியிடத் திட்டமிட்டிருப்பதாக வெளியான வதந்தியை தியான் மறுத்துள்ளார்.

நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில், பத்து தொகுதியின் வேட்பாளராக தியான் சுவா போட்டியிட முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து, அங்கு போட்டியிட்ட சட்டத்துறை மாணவரான பிரபாகரனுக்கு பக்காத்தான் ஹராப்பான் ஆதரவு வழங்கி உள்ளது.

தனது ஆதரவில், பிரபாகரன் அத்தொகுதியை வென்றவுடன், அவரிடமிருந்து அந்தத் தொகுதியை இடைத் தேர்தல் வாயிலாக பறித்துக் கொள்ள தியான் சுவா திட்டமிட்டுள்ளார் என்று வாட்ஸ்-ஆப் புலனத்தில் தகவல் பரவி வருகிறது.

“அந்தத் திட்டம் ஏதும் எனக்கில்லை. எனது வேட்புமனுவை நிராகரித்த தேர்தல் ஆணையத்தின் மீது நான் வழக்கு தொடரவிருக்கின்றேன் என்று தான் நான் சொன்னேன்” என்று தியான் சுவா சொன்னார்.

வாட்ஸ்-ஆப்பில் பரவி வரும் அந்தத் தகவல் குறித்து தாம் போலீஸ் புகார் ஏதும் தொடர்ந்து, நேரத்தை வீணடிக்கப் போவதில்லை என்று அவர் கூறினார்.

இதனிடையில், வாட்ஸ்-அப்பில் பரவி வரும் தகவலில் உண்மை இல்லை என்றும், அது குறித்து தாம் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக பி.பிரபாகரனின் வழக்கறிஞர் எம்.பரமேஸ்வரன் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker