Latestமலேசியா

பாகான் டத்தோவில் வாக்குகள் முன்கூட்டியே கணக்கெடுப்பா?

கோலாலம்பூர், மே.7- பாகான் டத்தோ தொகுதியில் கடந்த 5-ஆம் தேதியன்று நடந்த முன்வாக்களிப்பின் வாக்குகள் கணக்கெடுக்கப் படுவதாக வெளியாகியுள்ள தகவலில் உண்மை இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஊத்தான் மெலிந்தாங் தேர்தல் மையத்தில் தேவையில்லாத சச்சரவை ஏற்படுத்திய வேட்பாளர்களில் ஒருவரும், அவரது ஆதரவாளரும் இந்தப் போலித் தகவல்களை பரப்பி வருகின்றனர் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஶ்ரீ முகமட் ஹஷிம் அப்துல்லா கூறினார்.

“வாக்குச் சீட்டுப் பெட்டிகளில் உள்ள வாக்குகள் கணக்கெடுக்கப் படுவதாக அவர்கள் கூச்சலிட்டுள்ளனர். அதில் உண்மை இல்லை. மே 5-ஆம் தேதியன்று நடத்தப்பட்ட (முன்கூட்டியே) தேர்தல் வாக்குகள் மே மாதம் 9-ஆம் தேதியன்று, மாலை 4 மணிக்கு தான் கணக்கெடுக்கப்படும்” என்று முகமட் ஹஷிம் சொன்னார்.

அந்த வாக்குகள், ஊத்தான் மெலிந்தாங் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்தத் தேர்தல் முறையாக வேட்பாளர்களின் ஆஜெண்டுகள் முன்பு தான் நடைபெற்றன. அதன் கணக்கெடுப்பு, வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளின் முன்பு தான் நடைபெறும்” என்று அவர் விவரித்தார்.

ஊத்தான் மெலிந்தாங் தொகுதியில், 1,541 வாக்காளர்கள் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர் என்றும், அவர்களில் 508 பேர் முன்கூட்டியே வாக்களித்து விட்டனர் என்றும் முகமட் ஹஷிம் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker