Latestஇந்தியா

முகேஷ் அம்பானி குடும்பத்தில் இந்தியாவின் இரு பெரும் ஆடம்பர திருமணங்கள்!

முப்பை, மே.7- இந்தியாவின் மெகா கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் மகளைக் கரம் பிடிக்கிறார் பிரபல தொழிலதிபரின் வாரிசு ஒருவர். விரைவில் அம்பானி குடும்பத்தில் மேலும் ஒரு திருமணம். ஒரே காலக் காலக் கட்டத்தில் இந்தியாவின் இரு பெரும் ஆடம்பரத் திருமணங்கள் பற்றி பரபரப்பு செய்தி பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம் செய்தியின் தாக்கம் இன்னும் முடியாத நிலையில் தற்போது அவரது ஒரே மகளாக ஈஷா அம்பானியின் திருமணம் குறித்த செய்திகள் பரபரப்பாக வெளி கிளம்பியுள்ளது.

முகேஷ் அம்பானி மகளான ஈஷா அம்பானி தற்போது ரிலையண்ஸ் ஜியோ, இன்போகாம் ரிலையன்ஸ் ரீடைல் ஆகிய நிறுவனங்களின் நிர்வாகக் குழுவில் உள்ளார்.

இந்நிலையில் தற்போது ஈஷா அம்பானியை பிராம் குரூப் நிறுவனத்தின் தலைவரான ஆனந்த பிராமல் காதலிப்பதாகவும் இந்த வார இறுதியில் இருவருக்கும் திருமணம் உறுதி செய்யப்பட உள்ளதாகவும் ‘வோக்’ என்னும் பேஷன் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஈஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிராமல் ஆகியோரின் நெருக்கமான புகைப்படமும் ‘வோக்’ வெளியிட்டுள்ளது.

முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி வைர வியாபாரி மகளான சுலோகா மேத்தா என்பவரை மணக்க இருக்கிறார். இவர்களது பெண் பார்க்கும் நிகழ்ச்சி கோவாவில் நடந்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker