Latestஇந்தியா

விண்ணில் பாய்கிறது தமிழ் மாணவி உருவாக்கிய செயற்கை கோள்!

சென்னை, மே.7- தமிழகத்தில் மாணவி ஒருவர் உருவாக்கிய பூமி மாசுபடுவதை துல்லியமாக கண்டறியும் மினி செயற்கைகோள் இன்று விண்ணில் பாய்கிறது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரைச் சேர்ந்த வில்லெட் ஓவியா இதனை வடிவமைத்துள்ளார்.

திருச்சி பெல் வளாகத்தில் உள்ள ஆர்எஸ்கே மேல் நிலைப்பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள ஓவியா கடந்த 3 ஆண்டுகளாக உழைத்து வளி மண்டலத்தில் கலந்துள்ள மாசு மற்றும் வெப்பமயமாகுதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில் குறைந்த எடை கொண்ட செயற்கைகோள் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக போராடி தனது உயிரை கொடுத்து அரியலூர் மாணவி அனிதாவின் நினைவாக உருவாக்கியுள்ள செயற்கை கோளுக்கு அனிதா சாட் என்ற பெயரை சூட்டியுள்ளார்.

இது குறித்து வில்லெட் ஓவியா கூறுகையில், இந்த செயற்கை கோளில் வளிமண்டலத்தில் கலந்துள்ள கார்பன் மோனாக்சைடு கார்பன்- ஆக்சைடு- ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றின் அளவுகளை கண்டறிவதற்கு தேவையான சென்சார் கருவிகள் உள்ளன.

செல்போன் மூலமாகவே இதை கட்டுப்படுத்தலாம். 15 செண்டி மீட்டர் க்யூர் வடிவத்தில் ஏறத்தாழ இந்த செயற்கை கோள் இன்று வளிமண்டலத்தில் ஏவப்படவுள்ளது. மாணவியின் இந்த கடுமையான உழைப்பிற்கு சமூக வலைத்தளம் உட்பட பல இடங்களிலிருந்து வாழ்த்துகள் வந்த வண்ணம் உள்ளன.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker