Latestமலேசியா

எங்களுக்கு வாக்களித்தால் இலவசத் தண்ணீர் கிடைக்கும்? –அஸ்மின்

சிரம்பான், மே 8 – பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக்கு வந்தால் சிலாங்கூரைப் போன்று நெகிரி செம்பிலான் மக்களுக்கும் இலவசக் குடிநீர், இலவசப் பஸ் சேவை மற்றும் மருத்துவக் கார்டுகள் வழங்குவோம் என்று பி.கே.ஆர் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார்.

சிலாங்கூரில் நாங்கள் இலவசமாக தண்ணீர் தருகிறோம். இலவசமாக பேருந்து சேவை நடத்துகிறோம். சிலாங்கூரிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இலவச வைஃபை கிடைக்கிறது. நெகிரி செம்பிலானில், மக்களே இதெல்லாம் உங்களுக்கு கிடைக்கிறதா? என்று அவர் கேட்டார்.

இது மட்டுமின்றி இன்னும் பல சலுகைகளை சிலாங்கூர் அரசாங்கம் வழங்குகிறது. நீங்கள் பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களித்தால், இவையெல்லாம் உங்கள் மாநிலத்திலும் கிடைக்கும் என்றார் அவர்.

எங்கள் மாநிலத்தில் 400 கோடி ரிங்கிட் கூடுதல் கையிருப்பில் உள்ளது. இந்த கையிருப்பை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை. நீங்கள் எங்களை ஆதரித்தால், இந்தச் செல்வத்தை நாமெல்லாம் பகிர்ந்து கொள்ளலாம். ஏனெனில் சிலாங்கூரை ஒட்டி நெகிரி செம்பிலான் அமைந்துள்ளது. நாமெல்லாம் சகோதர்கள் அல்லவா என்று அஸ்மின் அலி பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker