Latestஇந்தியா

‘செல்பி’ எடுத்தால் பாடகர் ஜேசுதாஸ் ஏன் கோபப்படுகிறார்?

புதுடெல்லி. மே. 8- பிரபல பாடகர் ஜேசுதாஸ் டெல்லியில் நடந்த தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக தங்கியிருந்த விடுதியில் இருந்து வெளியில் வந்தார். அப்போது இளைஞர் ஒருவர் அவரிடம் செல்பி எடுத்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அந்த இளைஞனின் செல்போனை வாங்கி உள்ளே இருந்த புகைப்படத்தை நீக்கிய பின்பே செல்போனை அவரிடம் கொடுத்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் செல்பி எடுத்த இளைஞரிடம் இவ்வளவு கடுமை காட்ட அவசியமில்லை. ஒரு செல்பி எடுத்தால் என்ன ஆகி விடப்போகிறது தலைக்கனம் பிடித்தவர் என ஜேசுதாஸ் மீது கடுஞ்சொற்கள் பாய்ந்தன.

இந்நிலையில் ஜேசுதாஸின் தீவிர ரசிகரும் அவரைப் பற்றி தெரிந்தவருமான அனுப் என்பவர் சமூக வலைத்தளத்தில் அதற்கான பதிலளித்துள்ளார்.
அதில், மனிதர்கள் எப்போதும் இன்னொருவரின் உதவியின்றி வாழ நினைக்கக்கூடாது. மனிதர்கள் மட்டும்ல அனைத்து உயிர்களுமே ஒன்றை ஒன்று சார்ந்து வாழுக்கூடியவை மனித வாழ்க்கைக்கு இன்னொருவரின் துணையும் ஒத்துழைப்பும் தேவை.

ஒருவரை சார்ந்து மற்றொருவர் வாழ்வது தான் உலக நியதி. ஆனால் தற்போதைய இளைய தலைமுறை உறவுகளை வளர்க்க முடியவில்லை.
மாறாக, தனித் தனி தீவுகளாக இருக்கிறார்கள். முன்பெல்லாம் புகைப்படம் எடுத்துக் கொள்ள இன்னொருவர் உதவி தேவைப்பட்டது.

செல்பி வந்த பின் புகைப்படம் எடுக்கக் கூட இன்னொருவர் உதவி தேவையில்லை என்றாகி விட்டது. இதன் காரணமாக தான் ஜேசுதாஸ் செல்பி எடுக்க அனுமதிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

“நான் துபாய் விமான நிலையத்தில் அவருடன் புகைப்படம் எடந்த்துக் கொண்ட போது செல்பியை வெறுப்பதற்கான காரணத்தை ஜேசுதாஸ் கூறியதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் இன்னொரு நபர் உதவியுடன் புகைப்படம் எடுக்கும் போது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ‘போஸ்’ கொடுக்க ஜேசுதாஸ் தயங்குவதே இல்லை என அவர் பதிவிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker