Latestமலேசியா

சொந்த ஊர்களுக்கு வாக்காளர்கள் படையெடுப்பு! தொடங்கியது நெரிசல்!

கோலாலம்பூர், மே.8-  தங்களின் வாக்குரிமையை நிறைவேற்றுவதற்காக, இப்போதே மக்கள் சொந்த ஊர்களுக்குப்  படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். அதனால் நாட்டின் சில முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வரிசை பிடிக்கத் தொடங்கியுளளன.

பகாங், திரங்கானு, கிளந்தான் ஆகிய கிழக்குக்கரை மாநிலங்களுக்குச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை, நேற்றிரவு மணி 9 முதலே அதிகரித்தவாறு இருப்பது நெடுஞ்சாலை தரப்பில் கண்காணிப்பில் தெரியவந்துள்ளது.

அதனால், நேற்றிரவிலிருந்து இன்று காலை வரையில், கோம்பாக் டோல் சாவடி மற்றும் கோலாலம்பூர்- காராக் நெடுஞ்சாலை அருகே வாகனங்கள் மெதுவாக நகர்ந்தவாறு காணப்பட்டதாகக் கூறப்பட்டது.

மாறாக, வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் இரு வழிப் பாதைகளிலும் போக்குவரத்து நிலைமை சீராக இருப்பதாகவும், ஆனால், இன்று மாலை அதாவது அலுவலக நேரத்திற்குப் பிறகு, அங்கு வாகன நெரிசல் ஏற்படுமென கணிக்கப் படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker