Latestமலேசியா

மாற்றத்தை ஏற்படுத்த வாக்களியுங்கள்! –டான்ஶ்ரீ ராயிஸ்

கோலாலம்பூர், மே.8- வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதையும், பொருள் சேவை வரியால் மக்கள் சிரமப் பட்டிருப்பதையும் கருத்தில் கொண்டு, மலேசியர்கள் மாற்றத்திற்காக நாளை வாக்களிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரான டான்ஶ்ரீ ராயிஸ் யாத்தீம் அறிவுறுத்தினார்.

ஜசெக கட்சி ஆட்சிக்கு வந்தால், மலாய்க்காரர்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ள போதிலும், அன்றாட உணவை உண்பதில் சிரமம் ஏற்படக் கூடாது என்பதை எண்ணத்தில் கொண்டு, மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று ராயிஸ் கேட்டுக் கொண்டார்.

அதுமட்டுமல்லாது, ஜசெக மலாய்க்காரர்களின் உரிமைகளை பறித்து விடும் என்ற தகவலில் உண்மை இல்லை என்றும் அவர் வீடியோ ஒன்றில் தெரிவித்தார். ராயிஸ் யாத்தீம் பக்காத்தானுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார் என்பதால், அம்னோ அவரை விசாரணைக்கு உட்படுத்தவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“பக்காத்தான் ஹராப்பானுக்கு மலாய்க்காரர்கள் வாக்களித்து விடக் கூடாது என்ற நோக்கில், சிலர் அந்தப் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். நிலையாக யோசிக்கத் தெரிந்த மலாய்க்காரர்கள் இந்தத் தகவலை நம்ப மாட்டார்கள். தேசிய முன்னணி பல தவறான முடிவுகளை எடுத்து மக்களை கஷ்டப்படுத்துகிறது.

“நாட்டின் சொத்துகளை சூரையாடி, அதனை தேசிய முன்னணி கூட்டணி விற்பனை செய்துள்ளது. அதனை மக்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். மக்களின் கண்களுக்கு எதிரேயே ஊழல்கள் நிகழ்த்தப்படுகின்றன” என்று அவர் சொன்னார்.

தற்போதைய மலாய்க்காரர்கள், 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மலாய்க்காரர்கள் போல் அல்ல. இப்போதைய மலாய்க்காரர்களால் நல்ல முடிவை எடுக்க முடியும், என்று ராயிஸ் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker