Latestமலேசியா

லகாட் டத்து : 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

லாகாட் டத்து, மே.8-  “சஹாபாட்” நீரிணைப் பகுதியில் அத்துமீறி நுழைந்த தீவுரவாதிகள் நால்வரைப் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

இச்சம்பவம்  இன்று அதிகாலை மணி இரண்டு வாக்கில் நிகழ்ந்தது. பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில்,   நீரிணைப் பகுதியாக ஊடுருவி வந்த சம்பந்தப்பட்டல் தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கித் தாக்குதல் மேற்கொண்டிருக்கின்றனர்.

அவர்களிடமிருந்து தங்களைத் தற்காப்பதற்காக பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட எதிர்த் தாக்குதலில், அந்நால்வரும் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகள், லகாட் டத்துவுக்குள் நுழைந்ததற்கான உண்மைக் காரணம் இன்னும் சரியாகக் கண்டறியப்படவில்லை.

எனினும், அவர்கள், தென் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து, சபா போலீஸ் உயர் ஆணையர் டத்தோ ரம்லி டின், விரைவில் செய்தியாளர் சந்தைப்பை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker