Latestமலேசியா

வாக்கெடுப்பு முகவர் மரணம்!

ரவூப்,மே.9- கம்போங் பாரு செம்பாலிட் பாலாய் ராயாவில் பணியாற்றிக் கொண்டிருந்த தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் மரணமடைந்தார். ரோஸாலிசா முகமட் சயிட் என்ற அந்த வாக்கெடுப்பு முகவர் சுமார் 2.15 மணியளவில் கழிவறையில் விழுந்து உயிரிழந்தார்.

உயிரிழந்த அந்த வாக்கெடுப்பு முகவர், வயிற்றுப்போக்கு காரணமாக தனக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதென தம் மகளிடம் கூறியுள்ளார். பின்னர், கழிவறையில் சுயநினைவின்றி கிடந்த அவரை, அம்புலன்ஸ் மூலம் ரவூப் மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர்.

மருத்துவமனையில், அவர் இறந்துவிட்டதை, ரவுப் மாவட்ட போலிஸ் சூப்ரிட்டேன்டன் வான் முகமட் சஹாரி வான் புசு உறுதிப்படுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker