Latestமலேசியா

பொதுத் தேர்தல்: 8 அமைச்சர்கள், 19 துணையமைச்சர்கள் தோல்வி!

கோலாலம்பூர், மே.10- மலேசியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில், முதன் முறையாக எதிர்க்கட்சி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், தேசிய முன்னணியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் துணையமைச்சர்கள் பலர் அதிர்ச்சி தரும் வகையில் தோல்வி கண்டுள்ளனர்.

பெக்கான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு, பெரும்பான்மை வாக்குகளில் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் வெற்றி பெற்ற போதிலும், தே.மு சார்பில் போட்டியிட்ட 8 அமைச்சர்கள் மற்றும் 19 துணை அமைச்சர்கள், தோல்வியுற்றனர்.

போக்குவரத்து அமைச்சர் டத்தோஶ்ரீ லியோவ் தியோங் லாய், சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம், தோட்டத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ மா சியூவ் கியோங் ஆகியோர் தோல்வி அடைந்தனர். அம்மூவரும், மசீச, மஇகா மற்றும் கெராக்கான் ஆகிய கட்சிகளின் தேசிய தலைவராவார்கள். மேலும் தொஅல்வி கண்டவர்களில் முக்கிய அமைச்சரான டத்தோஶ்ரீ சாலே சையட் கெருவாக்கும் ஒருவராவார்.

துணை அமைச்சர்களான டத்தோஶ்ரீ அகமட் ஷபேரி, டத்தோஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி, டத்தோஶ்ரீ ஜாமீல் கிர் பஹாரோம், டத்தோ அப்துல் ரஹ்மான் டஹ்லான், டத்தோஶ்ரீ தேவமணி ஆகியோர் இந்தப் பொதுத் தேர்தலில் பெரும் தோல்வி கண்டனர்.

சாலே சையட் மற்றும் ரஹ்மான் ஆகிய இருவரும், நஜிப்பிற்கு பெரும் ஆதரவை வழங்கி வந்தனர். அவ்விருவரும், வாரிசான் கட்சி வேட்பாளர்களால் தோற்கடிக்கப் பட்டனர். அதேவேளையில் சபா பிபிஎஸ் கட்சியின் தலைவரும் துணையமைச்சருமான பைரின் கிட்டிங்கான், தம்புனான் சட்டமனறத் தொகுதியில் தம்முடைய சொந்தத் தம்பியான ஜேப்ரி கிட்டிங்கானால் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையில், ஜொகூர் மாநில மந்திரி பெசாரான டத்தோ முகமட் காலிட் நோர்டீன், பாசீர் கூடாங் நாடாளுமன்ற தொகுதியில் யாரும் எதிர்பார்க்காத அளவில் தோல்வியைத் தழுவினார்.

கெடா மாநிலத்தின் மந்திரி பெசாரான டத்தோஶ்ரீ அகமட் பாஷா, அவரது சுகா மெனாந்தி தொகுதியை இழந்தார். பேரா மந்திரி பெசார் டத்தோஶ்ரீ டாக்டர் ஜம்ரி காதீர், லுமுட் நாடாளுமன்றத்தொகுதியில் தோல்வி கண்டார்.

தோல்விகண்ட துணையமைச்சர்களின் பட்டியல் வருமாறு:
-Jeffrey kittingan
-Nasrudin Mansur
-Johari Baharum
-Rosnah Abd Rashid Shirlin
-Razali Ibrahim
-Othman Aziz
-Lee Chee Leong
-Hamim Samuri
-Nur Jazlan Mohamed
-Chua Tee Yong
-Chew Mei Fun
-Hilmi Yahaya
-Aziz Kaprawi
-Loga Bala Mohan
-Nogeh Gumbek
-Mary Yap
-P.Kamalanathan
-Chong Sin Woon
-Asyraf Wajdi
-S.K.Devamany

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker