Latestஉலகம்

அழகிகள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா அதிரடி!

லாஸ் ஏஞ்சலிஸ், மே. 11- உலகின் அழகான பெண்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் விஜய்யுடன் தமிழன் என்ற திரைப்படத்தில் தான் நாயகியாக அறிமுகமானார்.

இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் -தீபிகா படுகோனுக்கும் யார் முதலிடம் என்பதில் எப்போதுமே போட்டி இருந்து வரும் வேளை. பிரியங்கா ஹாலிவுட்டுக்குப் போனதால் தீபிகாவும் படை எடுத்தார். அவர்களுக்குள் நிஜமாகவே போட்டியிருக்கிறதோ, இல்லையோ, ரசிகர்கள் அப்படியொரு போட்டி மனப்பான்மையில் உள்ளனர்.

இந்நிலையில் உலகின் அழகானப் பெண்கள் பட்டியலில் தீபிகாவை பின்னுக்குத் தள்ளியிருக்கிறார் பிரியங்கா. யார் அழகான பெண்மணி என்ற கருத்துக் கணிப்பை சமூக வலைத்தளம் ஒன்று அண்மையில் ஆய்வு நடத்தியது.

இதில் முதலிடத்தில் பாடகியும் நடிகையுமான ஐகான் பியான்ஸ் இருக்கிறார். இவருக்கு அனைத்துலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் முதலிடத்தில் இருப்பதில் ஆச்சரியமில்லை.

இரண்டாவது இடத்தில் பிரியங்கா சோப்ரா வந்தது தான். பலரது புருவங்களை உயர வைத்திருக்கிறது. ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, எம்மா வாட்சன், தீபிகா படுகோன் ஆகியோரை பின்னுத் தள்ளியிருக்கிறார் பிரியங்கா.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker