Latestஉலகம்

சிங்கையில் ஜூன் 12-இல் டிரம்ப்-கிம் ஜோங் சந்திப்பு!

வாஷிங்டன்,மே.11-வட கொரியாவின் அணுவாயுத ஏணைகள் மீதான பேராசைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வட கொரியத் தலைவர் கிம் ஜோங் யுன்னுடனான தம்முடைய சிங்கப்பூர் சந்திப்பு அர்த்தமுள்ளதாக அமையும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சநிலைச் சந்திப்பு சிங்கப்பூரில் எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் தேதி இடம் பெறும் என்று அதிபர் டிரம்ப் சொன்னார். உலக அமைதிக்காக நாங்கள் இருவருமே இந்தச் சந்திப்பைச் சிறப்பு வாய்ந்த ஒரு தருணமாக மாற்றுவோம் என்று தம்முடைய ட்விட்டரில் டிரம்ப் சுட்டிக்காட்டி உள்ளார்.

இதனிடையே இந்தச் சந்திப்புக்கான வழிமுறைகளை எளிதாக்கும் வகையில், தான் கைது செய்து சிறைப்படுத்தி வைத்திருந்த மூன்று அமெரிக்கர்களை வட கொரியா விடுதலை செய்தது. அந்த மூவரும் அமெரிக்க அரசாங்க விமானத்தில் நேற்று வாஷிங்டன் வந்து சேர்ந்தனர். இவர்கள் வட கொரியாவுக்கு எதிராக உளவுச் சதியில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டதாக வடகொரிய அதிகாரிகள் கூறினர்.

ஒட்டுமொத்தமாக கொரிய தீபகற்பத்தை அணுவாயுதமற்ற பிரதேசமாக மாற்றுவதற்கு கிடைத்த அர்த்தமுள்ள வாய்ப்பாக கிம் ஜோங் யுன்னுடனான சந்திப்பைத் தாம் கருதுவதாக டிரம்ப் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker