Latestமலேசியா

சுவிஸ், சிங்கையில் உள்ள 1எம்டிபி பணம் மீட்பு! –மகாதீர்

கோலாலம்பூர், மே.11- சில நிதிகள் வெளிநாடுகளில் இருக்கின்றன. அதனை மீட்கும் முயற்சிகள் எடுக்கப்படும். குறிப்பாக, 1எம்டிபி நிதிகள் சுவிட்சிலாந்து, சிங்கப்பூர், அமெரிக்காவில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. அதனை நாங்கள் மீட்போம் என்று பிரதமர் துன் மகாதீர் கூறினார்.

நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை நிலை நிறுத்தி, அதன் அடிப்படையில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி புரியும் என்று துன் மகாதீர் முகமட் கூறினார்.

“அனைவருக்கும் ஏற்புடைய வணிக-நட்பு அரசாங்கத்தை இதற்கு முன்னர் நான் ஆதரித்துள்ளேன். அதையே நாங்கள் பின்பற்றுவோம். நாட்டின் பங்குச் சந்தை சுறுசுறுப்பாக இயங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பங்குச் சந்தையின் மூலதனத்தை நாங்கள் அதிகரிப்போம்” என்று அவர் சொன்னார்.

பொதுமக்கள், மலேசியாவின் பொருளாதாரம் குறித்து அதிக கவலைக் கொண்டுள்ளனர். நிதி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

“மலேசியாவின் ரிங்கிட் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதனை நிலைப் படுத்தி, அதன் மதிப்பை அதிகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும். பெட்ரோல் விலையும், ஒவ்வொரு நாளுக்கு ஒரு அறிவிப்பாக இருக்காது” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

நாட்டின் கடன் தொகையை கட்டுப் படுத்தும் முயற்சியில் தனக்கு சிரமம் ஏற்படக் கூடும் என்றும் அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker