Latestமலேசியா

காட்சி மாறியது; ஆட்சி மாறியது! சபாவில் ஷாபி முதல்வராகிறார்!

கோத்தாகினாபாலு,மே.12 – வாரிசான் கட்சியின் தலைவர் டத்தோ முகமட் ஷாபி அப்டால் இன்றிரவு சபாவின் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார் என அக்கட்சியின் துணைத் தலைவர் டேரேல் லெய்கிங் செய்தியாளர்களிடம் கூறினார்.

இன்று இரவு மணி 10.40க்கு நடைபெறும் பதவியேற்பு விழாவிற்கு தயாராகுமாறு அரண்மனை தரப்புத் தெரிவித்தது என அவர் குறிப்பிட்டார்.

வாரிசான் கட்சி, 60 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் 35 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டுள்ளது என டத்தோ முகமட் ஷாபி அப்டால் நேற்று உறுதிப் படுத்தினார்.

இந்நிலையில் நேற்று முந்தினம் டான்ஶ்ரீ மூசா அமான் தலைமையில் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது. முதல்வராக மூசா அமான் பொறுப்பேற்றார். எனினும், இந்த ஆட்சி இரு தினங்கள் கூட நீடிக்கவில்லை.

அவருக்கு ஆதரவு அளித்தததாகக் கூறப்பட்ட சிறிய கட்சி ஒன்று, அதிலிருந்து விலகி வாரிசான் கட்சிக்கு இப்போது ஆதரவு தெரிவித்து இருக்கிறது. மேலும் சபா அம்னோ உறுப்பினர்கள் நால்வர் அக்கட்சியை விட்டு விலகி வாரிசான் கட்சியில் இணைந்தனர். இதனால் அங்கு அரசியல் நிலவரம் தலைகீழாய் மாறிவிட்டது.

இதனால், இப்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது வாரிசான் கட்சித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஷாபி அப்டால் புதிய முதல்வராக இன்று இரவு பதவி ஏற்கவுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker