Latestமலேசியா

நஜிப்பின் உறவினர் வீட்டில் போலீஸ் அதிரடிச் சோதனை: ஆவணங்கள் எங்கே?

கோலாலம்பூர், மே.13- முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின்உறவினர் ஒருவர் தங்கி இருந்ததாக நம்பப்படும் ஆடரம்பர அடுக்கு மாடி வீட்டில் இன்று போலீசார் திடீரென அதிரடிச் சோதனைகளை நடத்தினர்.

முக்கிய சில ஆவணங்கள் இங்கு பதுக்கி வைக்கப் பட்டிருக்கக்கூடும் என்று கருதப்பட்டதால் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆவணங்கள் மலேசியாவில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தப்படலாம் என்று நம்பப்படுகிறது.

நஜிப்பின் துணைவியார் ரோஸ்மாவுக்காக அந்த அடுக்கு மாடி வீட்டில் சில பெட்டிகள், கைப் பைகளில் வைக்கப்பட்டு வழங்கப் பட்டுள்ளதாகவும் அந்தப் பெட்டிகளில் ஆவணங்களும் சில முக்கிய பொருள்களும் இருப்பதாகவும் அவை அரசாங்க வாகனங்களில் கொண்டு வரப்பட்டு ஒப்படைக்கப் பட்டதாகவும் தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாக போலீசார் கூறினர்.

கோலாலம்பூரிலுள்ள பெவிலியன் ரெஸிடெண்ட் ஆடம்பர அடுக்கு மாடி வீட்டில் சுமார் 20 க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டதாக தெரிகிறது.

அரசாங்கத்திற்குச் சொந்தமான சில முக்கிய ஆவணங்கள் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று தாங்கள் சந்தேகிப்பதாக போலீசார் கூறினர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker