Latestமலேசியா

நஜிப் -ரோஸ்மா வெளிநாடு செல்ல திடீர்த் தடை! பயணம் நிறுத்தம்!

கோலாலம்பூர்,மே.12- முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சோர் ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறாமல் தடுக்கப்பட்டனர். அவர்களின் பெயர்கள் பயணத் தடை கறுப்புப் பட்டியலில் உடனடியாக இப்போது சேர்க்கப்பட்டிருப்பதாக குடிநுழைவுத் துறை இயக்குனர் டத்தோஸ்ரீ முஸ்தபார் அலி தெரிவித்தார்.

அவர்கள் இருவரும் கறுப்புப் பட்டியலில் இல்லை என்று முதலில் கூறப்பட்டது. எனினும், காலை 11.30 மணியளவில் குடிநுழைவுத்துறை முகநூல் பதிவுப்படி அவர்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாத வண்ணம் பயணக் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது

மேலும், இவர்கள் இன்று காலை சுபாங் ஜெயா விமான நிலையம் வழியாக தனியார் ஜெட் விமானத்தில் வெளிநாடு புறப்படவிருந்த தருணத்தில் தடுக்கப்பட்டுள்ளனர்.

தாம் சிறிது கால ஓய்வுக்காக தனியார் ஜெட் விமானத்தில் வெளிநாடு புறப்படுவதாக டத்தோஶ்ரீ நஜிப் கூறியிருந்தார். அவர் ஜக்கர்த்தாவுக்கு பபுறப்படவிருந்த கடைசி தருணத்தில் இந்தத் தடை அமலபடுத்தப் பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker