Latestமலேசியா

நெகிரி செம்பிலான் மந்திரி புசாராக அமினுடின் பதவியேற்றார்!

கோலப்பிலா, மே 12 – நெகிரி செம்பிலான் மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அமினுடின் ஹரூன், குவாலா பீலா, செரி மெனாந்தியிலுள்ள இஸ்தானா பெசாரில் மந்திரி புசாராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

அவரின் பதவிப் பிரமாணம் நெகிரி செம்பிலானின் யாங் டிபெர்துவான் பெசார் துவாங்கு முக்ரிஸ் துவாங்கு முனாவர் முன்னிலையில் இன்று காலை 10.40 மணிக்கு நடைபெற்றது.

இந்தப் பதவியேற்பு விழாவில் நெகிரி செம்பிலானின் துவாங்கு அம்புவான் பெசார், துவாங்கு அயிஷா ரோஹாணி தெங்கு பெசார் மஹ்முட் அவர்களும் அவரின் இரு புதல்வர்களான துவாங்கு பெசார் செரி மெனாந்தி துவாங்கு அலி ரேடாவுடினும் துவாங்கு சயின் அல்அபீடினும் கலந்துக் கொண்டனர்.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 32 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் பக்காத்தான் ஹராப்பான் 20 சட்டமன்றத் தொகுதிகளை வென்றது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker