Latestமலேசியா

புதிய 10 அமைச்சர்கள் யார்? இன்று பிற்பகலில் அறிவிப்பு!

கோலாலம்பூர், மே.12 – பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் தலைமையிலான புதிய அமைச்சரவை உறுப்பினர்களின் பெயர் பட்டியல் இன்று பிற்பகலில் அறிவிக்கப்படும். தொடக்கக் கட்டமாக, 10 முக்கிய அமைச்சுகளுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவர்.

நிதி அமைச்சு , உள்துறை அமைச்சு , தற்காப்பு அமைச்சு, கல்வி அமைச்சு, புறநகர் மேம்பாட்டு அமைச்சு, பொருளாதார அமைச்சு , பொதுப் பணி அமைச்சு, போக்குவரத்து அமைச்சு , அறிவியல் தொழில்நுட்ப பல்லூடக அமைச்சு, வெளியுறவு அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான அமைச்சர்கள் யாவர் என்பதை துன் மகாதீர் பிற்பகலுக்கு பின் எந்நேரத்திலும் அறிவிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஆணையம், மலேசியா ஊழல் எதிர்ப்பு ஆணையம் மற்றும் சட்டத்துறை தலைவரின் செயல்பாடுகள் ஆகியவற்றின் மீதும் மகாதீர் கவனம் செலுத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபா தேர்தலில் ஊழல் நடந்திருக்கிறது என்பதற்கான ஆதாரம் இருந்தால் அத்தேர்தல் அங்கீகரிக்கப்படாது என்றும் மகாதீர் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker