உலகம்

அமைச்சரவை பிரச்னை: அன்வாரைச் சந்தித்தார் மகாதீர்!

கோலாலம்பூர், மே.13- மூன்று அமைச்சர்களின் பெயர்களை மட்டும் நேற்று அறிவித்த துன் மாகாதீர், தமது அமைச்சரவை தொடர்பான முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக பிகேஆரின் மூத்த தலைவராகக் கருதப்படும் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிமைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு  அன்வார் சிகிச்சை பெற்றுவரும் செராஸ் மருத்துவமனையில் நடந்தது.

பத்து அமைச்சர்களின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்படுவதாக இருந்தது. எனினும், மூவரின் பெயர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டது நிதியமைச்சராக லிம் குவான் என், உள்துறை அமைச்சராக டான்ஶ்ரீ மொகிஹீன் யாசின் மற்றும் தற்காப்பு அமைச்சராக முகம்மட் சாபு ஆகியோர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

இதர 7 அமைச்சுக்களுக்கான அமைச்சர்களின் பெயர்கள் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மகாதீருடன் பக்காத்தான் ஹராப்பானின் முக்கிய தலைவர்கள் சிலரும் அன்வாரைச் ச்ந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பு நடந்ததை பிகேஆரின் உதவித் தலைவரான தியான் சுவா உறுதிப்படுத்தினார்.

செவ்வாய்க் கிழமை அன்வார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படவிருக்கிறார். அடுத்த அவர் மாமன்னரிடமிருந்து பொது மன்னிப்பைப் பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker