Latestமலேசியா

பினாங்கின் புதிய முதல்வராக சவ் கோன் இயோவ் நாளை பதவியேற்பு!

ஜார்ஜ்டவுன் மே.13- பினாங்கு மாநிலத்தின் 5ஆவது முதலமைச்சராக பினாங்கு ஜசெகவின் தலைவரான சவ் கோன் இயோவ், நாளை மே 14ஆம் தேதி திங்கள் கிழமை பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார்.

இங்கு நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் இதனை அறிவித்த நடப்பு முதல்வர் லிம் குவான் எங், “நான் 10 ஆண்டுகாலம் பினாங்கு முதல்வராக இருந்து விட்டேன். எனக்குப் பதிலாக அந்தப் பணியை சவ் கோன் இயோவ் தொடர்வார். பினாங்கு எனக்கு அளித்த வாழ்வு இது. இதனை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்” என்று குறிப்பிட்டார்.

நேற்று பிரதமர் துன் மகாதீர் மூன்று அமைச்சர்களின் பெயரை அறிவித்த போது நாட்டின் நிதியமைச்சராக லிம் குவான் எங்  முன்மொழியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பக்காத்தான் ஹராப்பான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் புதிய முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் சவ் கோன் இயோவ் மிகுந்த அக்கறையுடன் செயல்படுவார் என்று லிம் குவான் கூறினார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker