Latestமலேசியா

தேர்தல் ஆணையர்கள் விலக வேண்டும்! –பெர்சே

கோலாலம்பூர், மே.14- நாட்டின் 14-ஆவது தேர்தலின் போது, ஜனநாயகத்தை மறுக்கும் வகையில் பல்வேறான முயற்சிகளில் தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் ஈடுபட்டதால், அந்த ஆணையத்தின் ஏழு தலைவர்களும் உடனடியாக தங்களின் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என்று பெர்சே 2.0 அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அந்த ஏழு ஆணையர்களும், பதவி விலக மறுக்கும் பட்சத்தில், அவர்கள் நீக்கப்பட வேண்டும் என்று பெர்சே 2.0 அமைப்பின் தலைவர் ஷாரூல் அமான் கூறினார்.

“அவர்கள் நீக்கப்படாவிடில், நிறுவனங்கள் மீதான மாற்றத்திற்கான மக்களின் கோரிக்கை ஏதோ ஒரு வகையில் செயல் முடியாமல் போய்விடும்” என்று அவர் விளக்கினார்.

தேர்தல் தினத்தன்று, பல்வேறான முறைகேடுகள் நிகழ்த்தப்பட்டதாகவும், அதனை பெர்சே மற்றும் பெமந்தாவ் உறுப்பினர்கள் நேரிடையாக கண்டதாகவும் ஷாரூல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் தான் தேர்தல் ஆணையத் தலைவர்கள் பதவி விலக வேண்டும் என்று தாங்கள் கோரிக்கை விடுப்பதாக அவர் தெளிவுப் படுத்தினார்.

“தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. பல்வேறான முறைகேடுகள் நிகழ்த்தப்பட்டன. நாணயத்தை அடிப்படையாக கொண்டு செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம்,நேர்மையை கடைப்பிடிக்கவில்லை” என்றார் அவ

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker