Latestமலேசியா

பணியைத் துவங்கினார் அஸ்மின் அலி!

ஷா ஆலம், மே.14- சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தனது முதல் நாள் பணியை மாநிலச் செயலகத்தில் துவங்கினார்.

சாம்பல் நிற கோட் சூட் அணிந்திருந்த அவர், சில அரசாங்க ஊழியர்கள் சூழ காலை மணி 7.45 அளவில் தனது அலுவலகத்திற்கு வருகைப் புரிந்த பின்னர், சிலாங்கூர் மந்திரி புசார் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் முன்னிலையில் உரையாற்றினார்.

நடந்து முடிந்த 14ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் பக்காத்தான் ஹராப்பான் அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி, கடந்த வெள்ளிக்கிழமையன்று சிலாங்கூரின் மந்திரி புசாராக இரண்டாவது தவணையாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் புதிய நிர்வாகத்தின் கீழ் பணியாற்றவிருக்கும் 10 மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவிப் பிரமாணச் சடங்கு, இன்று மதியம் 2 மணிக்கு சுல்தான் ஷாராவுடின் இட்ரிஸ் ஷா முன்னிலையில் கிள்ளான், இஸ்தானா அலாம் ஷாவில் இடம்பெறும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker