Latestஇந்தியா

‘ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல!’ பாரதிராஜா வழக்கு; -வைரமுத்து கருத்து

சென்னை, மே.14- இயக்குனர் பாரதிராஜா மீது வடபழனி காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதற்கு கண்டனம் தெரிவித்து கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஜன. 18ஆம் தேதி நடந்த விழா ஒன்றில் இயக்குனர் பாரதிராஜா இந்து கடவுள்களை அவமதித்து பேசியதாக இந்து அமைப்புகள் புகார் தெரிவித்து இருந்தன.

இந்தப் புகார் மீது முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டி ருந்தது.

இந்நிலையில் இன்று பாரதிராஜா மீது வடபழனி காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதியப்பட்டு ள்ளன. இதற்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “பாரதிராஜா மீதான வழக்கு பழிவாங்கும் செயலாகும். வழக்கு பெரிதல்ல, ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல. அவரை நாங்கள் சட்டப்படி மீட்டெடுப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

மத்திய மற்றும் மாநில அரசுக்கு எதிராகவும் காவிரி விவகாரத்திலும் இயக்குனர் பாரதிராஜா செயலாற்றி வருவதால் அவரைக் கைது செய்வதற்காக இந்த வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துப் பரவி வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker