Latestவிளையாட்டு

உலகக் கிண்ணம் : ஈரான் குழுவில் சர்ச்சைக்குரிய வீரர்கள்!

தெஹ்ரான்,மே.15-ஜூன் மாதம் ரஷ்யாவில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ணப் போட்டிக்கு 35 கால்பந்து வீரர்களைக் கொண்ட ஆட்டக்காரர்களின் பட்டியலை ஈரான் அறிவித்துள்ளது.

இந்த ஆட்டக்காரர்களில், கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்ட இரண்டு மத்திய திடல் ஆட்டக்காரர்களும் அடங்குவர். கடந்த ஆண்டு மசூத் ஷோஜாய், மற்றும் எஷான் ஹஜி சஃபி ஆகிய இரு மத்திய திடல் வீரர்களை ஈரான் கால்பந்து சம்மேளனம் தடை செய்தது.

இவர்கள் இருவரும் இஸ்ரேலை சேர்ந்த ஒரு குழுவுக்கு எதிராக தங்களுடைய கிரீக் கால்பந்துக் குழுவின் சார்பில் விளையாடியதால் ஈரான் தடை விதித்தது. எனினும், ஈரானிய கால்பந்து ரசிகர்கள் மத்தியில் இதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

மேலும், இஸ்ரேலை தாங்கள் அங்கீகரிக்காததால் அந்த நாட்டைச் சேர்ந்த அந்த நாட்டைச் சேர்ந்த எந்தவொரு குழுவுக்கும் எதிராக ஈரானியர்கள் விளையாடக் கூடாது என ஈரான் கருதுகிறது.

எனினும், அனைத்துலக விளையாட்டு விதிமுறைகளுக்கு இது எதிரானது என்பதால் வெளிப்படையாக செயல்படாமல், மறைமுகத் தடைகளை தனது இரு ஆட்டக்காரர்களுக்கு எதிராக ஈரான் அமல்படுத்தி இருந்தது.

ஆனால், உலகக் கிண்ணப் போட்டியில், அனுபவம் வாய்ந்த ஆட்டக்காரர்கள் இடம்பெற வேண்டும் என்று ஈரானிய ரசிகர்கள் நெருக்குதல் அளித்து வருவதாக கூறப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker