Latestஇந்தியா

‘எழுத்துச் சித்தர்’ பாலகுமாரன் காலமானார்!

சென்னை, மே15- உடல் நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழின் பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் (வயது 71) இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார்.

தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்ல பாட்ஷா, நாயகன், குணா, புதுப்பேட்டை உள்ளிட்ட பல சினிமாலும் பாலகுமாரனின் பங்களிப்பு முக்கியமானது. அவருடைய எழுத்துகளைப் பின்பற்றி வாழ்ந்தவர்கள் பலர். அவரால் எழுத்தாளரானவர்களும் உள்ளனர்.

சூப்பர் ஹிட் படங்களான பாட்ஷா, குணா , முகவரி, சிட்டிசன் உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் வசனம் எழுதியுள்ளார். ரசிகர்களின் அன்பால் எழுத்துச் சித்தர் என்றும் அழைக்கப்படுவர் பாலகுமாரன்.

இவரது ‘இரும்புக் குதிரை’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர். இவர் எழுதியுள்ள ‘மெர்க்குரி பூக்கள்’, ‘உடையார்’ உள்ளிட்ட பல நாவல்கள் மிகவும் பிரபலமானது. பெரும் வாசக பெருமக்களின் கவனத்தை ஈர்த்த படைப்பாளி பாலகுமாரன்.

சில ஆண்டுகளுக்கு முன் இதயநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். அண்மையில் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் நலம் தேறி வீடு திரும்பினார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் இன்றி இன்று காலமானார்.
இதனிடையே, நடிகர் கமல்ஹாசன், வைரமுத்து உள்ளிட்ட திரைத்துறையினர் பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker