Latestஇந்தியா

கர்நாடகத் தேர்தல்: ஆட்சி அமைப்பதில் இழுபறி!

பெங்களூர். மே.15- கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக பெரும்பான்மையில் ஆட்சியமைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி அமைந்துள்ளன. காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா கட்சி (மஜக) சில தொகுதிகளில் முன்னிலைக்கு வந்தன. இதனால் ஆட்சி அமைப்பது இழுபறியானது.

பாஜக 104 தொகுதிகளிலும் காங்கிரஸ் 72 தொகுதிகளிலும் மஜக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.

ஆட்சியமைக்க 113 இடங்கள் தேவை. பாஜக பெரும்பான்மையை எட்டவில்லை. அதனால், பாஜவை ஆட்சியமைக்க விடாமல் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா கட்சி தளத்துடன் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன.

அதனால் தற்போதைய நிலவரப்படி கர்நாடகவில் ஆட்சியமைக்க இழுபறி நிலை நிலவுகிறது. கர்நாடகாவில் குமாரசாமியை முதலமைச்சராக்க காங்கிரஸ் திட்டம்.

இதனிடையே மஜக தலைவர் தேவுகவுடாவுடன் சோனியா காந்தி அவசர பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். முதலமைச்சர் பதவியை குமாரசாமிக்கு விட்டுக் கொடுக்க காங்கிரஸ் சம்மதித்திருப்பதாகவும் தகவல் வெளியானது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker