Latestமலேசியா

தேர்தலில்  தில்லுமுல்லு இல்லை! -டான்ஶ்ரீ ஹாஷிம்

புத்ராஜெயா,மே.15- பாக்காத்தான் ஹராப்பானுக்கு வெற்றியாக அமைந்த 14ஆவது பொதுத் தேர்தல், நேர்மையான முறையிலேயே நடந்து எனத் தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் ஹாஷிம் அப்துல்லா தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் குறிப்பிட்ட சில கட்சிகள் வெற்றி பெற, தேர்தல் ஆணையம் ஒத்துழைத்தது என்ற ‘பெர்சே’வின் குற்றச்சாட்டைத் தேர்தல் ஆணையம் மறுத்தது.

தேர்தல் ஆணையம், வாக்குச் சீட்டுகள் எண்ணிக்கைப் போன்ற விஷயங்களில் தலையிடவில்லை எனவும் வாக்களிப்பு முறை பொதுமக்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 259,000 தேர்தல் ஆணைய ஊழியர்களால் நடத்தப்பட்டது எனவும் ஹாஷிம் கூறினார்.

14ஆவது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பானுக்கு கிடைத்த வெற்றி, இத்தேர்தல் நியாயமான முறையில் நடந்ததற்கான ஆதாரம் எனக் கருத்துரைத்த அவர், வாக்களிப்பு முறையில் எந்தவொரு தவறான அணுகுமுறையும் இல்லை என்பதனை நிரூபிக்கத் தேர்தல் ஆணையம் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker