Latestஉலகம்

தொங்கு பாலம்; 7 மருத்துவ மாணவர்கள் உயிரைப் பறித்தது!

இஸ்லாமாபாத். மே.15- பாகிஸ்தானின் புகழ்பெற்ற ‘நீலம்’ பள்ளத்தாக்கில் புகைப்படம் எடுக்க மரப்பாலம் ஒன்றின் மீது நின்றிருந்தனர் சுற்றுலா வந்த மருத்துவ மாணவர்கள் பலர், தொங்கு பாலம் உடைந்து விழுந்து, பாஆற்றில் மூழ்கினர். அதில் 7 மருத்துவ மாணவர்கள் மரணம் அடைந்தனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரீல் நீலம் பள்ளதாக்கு என்ற பகுதி உள்ளது. உள்ளது. அங்கு மிகப் பெரிய ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றை மக்கள் கடந்து செல்வதற்காக ஆற்றின் நடுவே மரத்திலான தொங்கு பாலம் ஒன்று இருக்கும். தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த அந்தப் பாலத்தில் ஒரே சமயத்தில் அதிக பட்சமாக 4 பேர் மட்டுமே செல்லமுடியும்.

இது தொடர்பாக எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன. ஆனாலும் அங்கு சுற்றுலா வரும் பயணிகள் இதனைப் பொருட்படுத்தாமல் மரப்பாலத்தில் கூட்டம் கூட்டமாக செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பைசலாபாத் மற்றும் லாகூரில் இருந்து 2 தனியார் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த 25 க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று நீலம் பள்ளத்தாக்கு பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

அப்போது அவர்கள் அனைவரும் ஆற்றின் நடுவே இருந்த மரப்பாலத்தில் ஏறி நின்று தீவிரமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். திடீரென அந்தப் பாலம் உடைந்து ஆற்றில் விழுந்தது.

பாலத்தில் மீது நின்றுக்கொண்டிருந்து மாணவர்கள் அனைவரும் நீரில் மூழ்கினர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் மீட்பு குழுவினரும் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்தனர். அதில் ஏழு மாணவர்களை பிணமாகத் தான் மீட்க முடிந்தது என்று மீட்பு படையினர் தெரிவித்தனர்.

அதில் 11 மாணவர்கள் படுங்காயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் 9 மாணவர்களை காணவில்லை அவர்களைத் தேடும் பணியில் முழு முயற்சில் மீட்பு பணியாளர்கள் போராடி வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker